ஸ்ரீமடத்தில் சாரதா நவராத்திரி மஹோத்சவம் அக்டோபர் 16 – 24
பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மற்றும் பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் சாரதா நவராத்திரி மஹோத்சவம் ஸ்ரீ மஹா திருபுரசுந்தரி சமேத ஸ்ரீ சந்திரமௌலீஸ்வர ஸ்வாமி பூஜை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரத்தில் வருகின்ற அக்டோபர் 16 முதல் 24 வரை செய்ய உள்ளார்கள்.
விசேஷ பூஜை, ஜபம், பாராயணம், ஹோமம் இந்த நாட்களில் லோகஷேமத்திற்காக நடைபெறும். பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா திருபுரசுந்தரி சமேத ஸ்ரீ சந்திரமௌலீஸ்வர ஸ்வாமியின் அருள் மற்றும் ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகளின் அருளைப் பெறவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.